திருநெல்வேலி

பணகுடி, காவல்கிணறு குளங்களில் குடிமராமத்து: விவசாயிகள் கோரிக்கை

13th Sep 2019 06:52 AM

ADVERTISEMENT

பணகுடி, காவல்கிணறு பகுதியில் உள்ள குளங்களை குடிமராமத்து செய்யவேண்டும் என காவல்கிணறு நீர்நிலை பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பு தலைவர் ராமராஜன் கோரிக்கை விடுத்துள்ளார். 
இது தொடர்பாக அவர் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு: தமிழக அரசு விவசாய குளங்களை குடிமராமத்து செய்யும் பணியை தீவிரமாக செய்து வருகிறது. 
திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு குளங்களில் குடிமராமத்து பணிகள் நடந்து வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் சுமார் ரு.45 கோடி செலவில் குடிமராமத்து பணிகள் நடந்து வருவதாக தெரியவருகிறது. 
இந்நிலையில் பணகுடி, காவல்கிணறு பகுதியில் உள்ள குளங்களில் குடிமராமத்து பணிகள் நடக்கவில்லை என்பது விவசாயிகள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த பகுதி குளங்கள் விவசாயத்திற்கு மட்டுமல்லாமல் குடிநீர் ஆதாரமாகவும் இருந்து வருகிறது. 
எனவே இப்பகுதி குளங்களையும் குடிமராமத்து செய்யவேண்டும். குறிப்பாக காவல்கிணறு மணிமாலைபுதுக்குளம், பெருமாள்புதுக்குளம், விநாயகர் புதுக்குளம் ஆகிய குளங்களில் குடிமராமத்து செய்யவேண்டும் என்றார். இந்நிலையில் பணகுடி பகுதி குளங்களில் குடிமராமத்து செய்யவேண்டும் என பணகுடி பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் மு.சங்கர் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தியுள்ளார். 
பணகுடி அருகே உள்ள அண்ணத்திகுளம், பிரிவிரிசூரியன் குளம், தண்டையார்குளம், பெரும்பத்து குளம், நவரைகுளம் ஆகிய குளங்களில் குடிமராமத்து செய்யவேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். தெற்குகள்ளிகுளம், பெட்டைகுளம் ஆகிய குளங்களில் குடிமராமத்து செய்யவேண்டும் என தெற்குகள்ளிகுளம் சமூக ஆர்வலர் திரவியம் வலியுறுத்தியுள்ளார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT