திருநெல்வேலி

தோரணமலை முருகன் கோயிலில் இன்று வேல் பூஜை

13th Sep 2019 06:50 AM

ADVERTISEMENT

தென்காசி-கடையம் பிரதான சாலையில் அமைந்துள்ள தோரணமலை முருகன் கோயிலில் மழை வேண்டி வெள்ளிக்கிழமை (செப்.13) வேல் பூஜை நடைபெறுகிறது.
மழை செழித்து விவசாயம் தழைக்க வேண்டி நடைபெற்ற இப்பூஜையை முன்னிட்டு பக்தர்கள் மலை உச்சியில் உள்ள சுனையில் இருந்து கிரக குடம் எடுத்து வருகின்றனர். தொடர்ந்து சப்த கன்னியர்கள், விநாயகர் மற்றும் தெய்வங்களும், மதியம் மலை உச்சியில் உள்ள பத்திரகாளியம்மன் மற்றும் முருகருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை ஆகியவை நடைபெறும்.
ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் ஆதி நாராயணன் மற்றும் செண்பகராமன் செய்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT