திருநெல்வேலி

"தாம்பரம்-நெல்லை விரைவு ரயிலை நாகர்கோவில் வரை நீட்டிக்க வேண்டும்'

13th Sep 2019 06:51 AM

ADVERTISEMENT

தாம்பரத்திலிருந்து திருநெல்வேலி வரையில் இயக்கப்பட்டு வரும் விரைவு ரயிலை, வள்ளியூர் வழியாக நாகர்கோவில் வரை நீட்டிக்க வேண்டும் என வள்ளியூர் வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக சங்கச் செயலர் தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கு அனுப்பியுள்ள மனு: தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த விரைவு ரயிலை வள்ளியூர் வழியாக நாகர்கோவில் வரை நீட்டிக்க வேண்டும். மேலும் நாகர்கோவிலில் இருந்து வள்ளியூர் வழியாக கொல்கத்தா செல்லும் ஹவுரா விரைவு ரயிலும்,  தில்லி செல்லக்கூடிய நிஜாமுதீன் விரைவு ரயிலும் வள்ளியூரில் நிற்பதில்லை. இந்த இரு ரயில்களிலும் செல்லக்கூடிய பயணிகள் திருநெல்வேலிக்குச் சென்றுதான் ரயில் ஏற வேண்டிய நிலை உள்ளது. இதனால் தில்லி செல்லக்கூடிய பயணிகள் மிகவும் சிரமங்களை சந்திக்க வேண்டியதுள்ளது. 
எனவே பயணிகள் நலன் கருதி கொல்கத்தா விரைவு ரயிலையும், நிஜாமுதீன் விரைவு ரயிலையும் வள்ளியூர் ரயில் நிலையத்தில் நிறுத்திச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT