திருநெல்வேலி

தாமிரவருணியில் கட்டப்படும் குடிநீர் திட்ட பாலம் சேதம்

13th Sep 2019 10:16 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி கருப்பந்துறையில் தாமிரவருணியின் குறுக்கே குடிநீர்த்  திட்டத்தின் குழாய்  பதிப்பதற்காக கட்டப்பட்டு வரும் புதிய பாலத்தின் ஒரு பகுதி வியாழக்கிழமை இடிந்து சேதமானது.
மேலப்பாளையம் அருகே மேலநத்தம்-கருப்பந்துறை இடையே தாமிரவருணி ஆற்றின் குறுக்கே கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளுக்காக குடிநீர் குழாய் அமைக்க சிறிய பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதில் பெருமளவில் பணிகள் முடிந்த நிலையில் மேற்குப்பகுதியில் கான்கிரீட்  அமைக்கும் பணி அண்மையில் நடைபெற்றது. இந்நிலையில் அந்த கான்கிரீட் போட்ட பகுதி வியாழக்கிழமை திடீரென இடிந்து சேதமானது. அதிருஷ்டவசமாக அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் உயிர் தப்பினர். தகவலறிந்த போலீஸார் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT