திருநெல்வேலி

ஆலங்குளத்தில் எரிவாயு விழிப்புணர்வு நிகழ்ச்சி

13th Sep 2019 06:53 AM

ADVERTISEMENT

ஆலங்குளம் ஜீவா மாண்டிசோரி பள்ளயில் எரிவாயு பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
பாரத் எரிவாயு சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் எரிவாயு உருளைகளை கையாளும் முறைகள், அவசர காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், உருளையின் காலாவதி தேதி கண்டு பிடிக்கும் முறை, விபத்து ஏற்பட்டால் அதிலிருந்து தப்புவது எவ்வாறு என்பது உள்ளிட்ட விழிப்புணர்வுகள் குறு நாடகம் மற்றும் செயல் முறை விளக்கம் மூலம் மாணவர்களுக்கு எடுத்துக் கூறப்பட்டன.  நிகழ்ச்சிக்குப் பள்ளி முதல்வர் ஏஞ்சல் தலைமை வகித்தார்.  பாரத் எரிவாயு விநியோகஸ்தர்  ஆதிமூலம் தலைமையில் குழுவினர் நிகழ்ச்சிகளை நடத்தினர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT