திருநெல்வேலி

பாளை.யில் மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

10th Sep 2019 10:49 AM

ADVERTISEMENT

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மின் ஊழியர்களின் சிஐடியூ சார்பில் பளையங்கோட்டை தியாகராஜநகரில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. 
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு-சிஐடியூ சார்பில் நடைபெற்ற மாநிலம் தழுவிய அளவில் நடைபெற்ற இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக, தியாகராஜநகர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, திட்டத் தலைவர் பீர்முஹம்மது தலைமை வகித்தார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் டி.கந்தசாமி, திட்ட துணைத் தலைவர் எஸ்.பூலுடையார், திட்டப் பொருளாளர் பி.நாகையன், மாநிலச் செயலர் எஸ்.வண்ணமுத்து உள்ளிட்டோர் விளக்கிப் பேசினர். 
மின்வாரிய காலிப்பணியிடங்களை ஐடிஐ படித்தவர்களைக்கொண்டும், ஒப்பந்த ஊழியர்களைக் கொண்டும் நிரப்பவேண்டும்; "கேங் மேன்' பதவியை கள உதவியாளர் என மாற்றவேண்டும்; 1,200 கணக்கீட்டாளர்களை 2ஆம் நிலை  கணக்கீட்டாளர்களாக இணைத்தற்கான ஆண்டு உயர்வை வழங்க வேண்டும்; பகுதிநேர ஊழியர்களை நிரந்தரம் செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகள்  வலியுறுத்தப்பட்டன. கோட்ட செயலர் டி.சுப்பிரமணியன் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் மின்வாரிய ஊழியர்கள்,  அமைப்பு நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT