திருநெல்வேலி

ஸ்ரீமன் நாராயணசாமி கோயில்களில் ஆவணிப் பெருந்திருவிழா கொடியேற்றம்

7th Sep 2019 08:35 AM

ADVERTISEMENT

அம்பாசமுத்திரம் வாகைக்குளம் வாகைபதி, திருவிருத்தான்புள்ளி ஸ்ரீமன் நாராயணசாமி திருத்தாங்கலில் ஆவணிப் பெருந்திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அம்பாசமுத்திரம் அருகே வாகைக்குளம் வாகைபதியில் இத்திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு அய்யா வைகுண்டர் ஆதிநாராயணர் கருட வாகனத்தில் எழுந்தருளினார்.இதையடுத்து கொடியேற்றும் வைபவம் நடைபெற்றது. இரவில் அய்யா தண்டி வாகனத்தில் காட்சியளித்தார். 
திருவிழா நாள்களில் தினமும் அய்யா வைகுண்டர் கருடன், சிம்மம், அன்னம், சூரியன், நாகம், பூம்பல்லக்கு, குதிரை, அனுமன், இந்திரன், காளை உள்ளிட்ட வாகனங்களில் வீதியுலா நடைபெறுகிறது. 8 ஆம் நாளான வரும் செப்.13  ஆம் தேதி காலை 11 மணிக்கு பால்கிணற்றிலிருந்து பால்குடம் எடுத்து வருதல், அதிகாலை 3 மணிக்கு அய்யா ஆதிநாராயணர் குதிரை வாகனத்தில் கலிவேட்டையாடுதல் நிகழ்ச்சி ஆகியவை நடைபெறும்.
11ஆம் நாளான செப். 16  ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. திருவிழா நாள்களில் தினமும் இரவில் அன்னதர்மம், சிறப்புப் பணிவிடை ஆகியவை நடைபெறும். ஏற்பாடுகளை வாகைபதி அய்யா வழித்தொண்டர்கள், அன்புக் கொடி மக்கள் செய்துள்ளனர்.
சேரன்மகாதேவி அருகேயுள்ள திருவிருத்தான்புள்ளி வேலியார்குளம் ஸ்ரீமன் நாராயணசாமி திருத்தாங்கலில் ஆவணிப் பெருந்திருவிழாவை  அதிகாலையில் திருநாமக் கொடியேற்றம் நடைபெற்றது. மாலையில் பெண்கள் பங்கேற்ற  திருவிளக்கு  வழிபாடு ஆகியவை நடைபெற்றது. 
3 ஆம் நாளான செப். 8 ஆம் தேதி அய்யா நாகத் தொட்டில் ஊஞ்சலில் கிருஷ்ணராக அமர்ந்து அய்யாவைத் தாலாட்டுதல், , 7 ஆம் நாளான செப். 12 ஆம் தேதி இரவு ஜி.என்.சிவச்சந்திரன் அருளிசை வழிபாடு, வரும் செப். 13 ஆம் தேதி அய்யா  குதிரை வாகனத்தில் வந்து கலியழித்தல், செப்.14 ஆம் தேதி அய்யா அனுமன் வாகனத்தில் ஸ்ரீராமராக காட்சியளித்தல், செப்.16  ஆம் தேதி மாலையில் அய்யா இந்திர வாகனத்தில் வைகுண்ட ராஜாவாக பவனி வருதல்ஆகியவை நடைபெறுகிறது.
திருவிழா நாள்களில் தினமும் அதிகாலை 5 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடை, தர்மம், பகல் 12 மணிக்கு அய்யாவுக்குப் பணிவிடை, உச்சிப்படிப்பு, தர்மம், மாலை 6 மணிக்கு திரு ஏடு வாசித்தல்,  இரவு 7 மணிக்கு அய்யாவுக்குப் பணிவிடையைத் தொடர்ந்து அன்னதர்மம் ஆகியவை நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை அன்புக் கொடிமக்கள், ஸ்ரீமன் நாராயணசாமி திருத்தாங்கல் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT