திருநெல்வேலி

மோட்டார் வாகன திருத்தச் சட்டம்:  அபராதங்களை குறைக்க வலியுறுத்தல்

7th Sep 2019 10:47 AM

ADVERTISEMENT

மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன திருத்தச் சட்டத்தின் கீழ் விதிக்கப்படும் அபராத தொகையை குறைக்க வேண்டுமென வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
நெல்லை வியாபாரிகள் முன்னேற்ற பாதுகாப்புச் சங்கத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் கே. முகம்மது யூசுப் தலைமை வகித்தார். ஆலோசகர் மை. சம்சுதின், துணைத் தலைவர் எஸ்.பி. நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர்கள் எம்.எஸ். கான்முகம்மது, ஏ.கே.எஸ். முஹ்ம்மது ஹனீபா, துணைச் செயலர் டி. ஜவஹர், பொருளாளர் ஜெ. மாரியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தீர்மானங்கள்: பொலிவுறு நகரம் (ஸ்மார்ட் சிட்டி) திட்டத்தின் கீழ், திருநெல்வேலி நகரம் போஸ் தினசரி சந்தையில் புதிய கட்டடம் கட்டுவதற்காக நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. இதனால்,  வியாபாரிகள் பாதிக்கப்படும் சூழல் உள்ளதால், இத்திட்டத்தைக் கைவிட வேண்டும். திருநெல்வேலி நகரத்தில் குடிநீர்க் குழாய் பதிக்கும் பணிகளால் சேதமடைந்த சாலைகளை விரைவாக சீரமைக்க வேண்டும். 
மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன திருத்தச் சட்டத்தின் கீழ், அபராத தொகை மிகவும் அதிகமாக உள்ளதால், வியாபாரிகள், வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர். அதை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
நான்குவழிச் சாலையில் சுங்கச்சாவடி கட்டண உயர்வைத் திரும்பப் பெறவேண்டும்.  திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையப் பணிகள் மிகவும் தொய்வாக நடைபெற்று வருகிறது. அதை விரைவுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT