திருநெல்வேலி

பாளை. கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி

7th Sep 2019 10:50 AM

ADVERTISEMENT

பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் மாணவர், மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது. 
கல்லூரி முதல்வர் (பொறுப்பு) எஸ்.ஹெச். முகம்மது அமீன்  தலைமை வகித்து நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.   நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் எம். சாகுல் ஹமீது வரவேற்றார். மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பி. மாணிக்கம், என். பாத்திமா பர்வீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
வட்டார போக்குவரத்து அலுவலர் ஜே. ஷேக் முகம்மது சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சாலைப் பாதுகாப்பு மற்றும் மாணவர், மாணவிகள் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள், பாதுகாப்பு விழிப்புணர்வு தொடர்பான வழிகாட்டுதல்கள் குறித்து சிறப்புரையாற்றியதோடு, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு புத்தகத்தையும் வெளியிட்டார். இதில், 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு சாலை பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். சிட்டி டிரைவிங் பள்ளி நிறுவனர்  என். நைனா முகம்மது நன்றி கூறினார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் தமிழினியன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.  
ஏற்பாடுகளை நாட்டுநலப் பணித்திட்ட அலுவலர்கள் ஜெஸ்லின் கனக இன்பா, ஜெமி மெர்லின் ராணி,  மாரியம்மாள் ஆகியோர் செய்திருந்தனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT