திருநெல்வேலி

நிதிசார் அரசுத் திட்டங்கள்: அறிவியல் மையத்தில் பயிலரங்கு

7th Sep 2019 10:49 AM

ADVERTISEMENT

கொக்கிரகுளத்தில் உள்ள மாவட்ட அறிவியல் மையத்தில் மத்திய அரசுத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வுப் பயிலரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சென்னையில் உள்ள பத்திரிகை தகவல் மையம் சார்பில் நடைபெற்ற இப்பயிலரங்கை, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தொடங்கி வைத்தார். பத்திரிகை தகவல் மைய கூடுதல் இயக்குநர் மாரியப்பன் வரவேற்றார். 
அஞ்சலகத்தில் செயல்படுத்தப்படும் நிதிசார் திட்டங்கள் என்ற தலைப்பில் திருநெல்வேலி கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் ஆர். சாந்தகுமார், வங்கிகள் மூலம் செயல்படுத்தப்படும் மத்திய அரசின் நிதிசார் திட்டங்கள் குறித்து முன்னோடி வங்கி மேலாளர் ஏ.வெற்றிவேல், கட்டுடல் இந்தியா திட்டம் குறித்து மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக உடற்கல்வியியல் துறைப் பேராசிரியர் துரை ஆகியோர் பேசினர்.
பத்திரிகை தகவல் மைய இயக்குநர் நீதிம் தாஃபில் வாழ்த்திப் பேசினார். அறிவியல் மைய கல்வி உதவியாளர் மாரிலெனின், அஞ்சல்துறை மக்கள் தொடர்பு அலுவலர் கனகசபாபதி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT