திருநெல்வேலி

திருமலையப்பபுரத்தில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா

7th Sep 2019 08:33 AM

ADVERTISEMENT

கடையம் அருகேயுள்ள திருமலையப்பபுரத்தில் தேசிய ஊட்டச்சத்து மாத விழாவின் 6ஆவது நாளான வெள்ளிக்கிழமை போஷான் மா விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
கடையம் வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ப்புத் திட்டம்  சார்பில் நடைபெற்ற இப்பேரணியை, மேற்பார்வையாளர் பூமதி தொடங்கிவைத்தார். மேற்பார்வையாளர்கள் சுப்புலட்சுமி, தமிழ்ச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பேரணியில், அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியும் முழக்கமிட்டும் சென்றனர். வட்டார திட்ட உதவியாளர் முருகேஷ்வரி நன்றி கூறினார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT