திருநெல்வேலி

சுருக்குமடி வலையை பயன்படுத்தினால் அரசின் நலத்திட்ட உதவிகள் நிறுத்தப்படும்: மீனவர்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை

7th Sep 2019 10:49 AM

ADVERTISEMENT

கடலில் சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடித்தால், சம்பந்தப்பட்ட மீனவர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் நிறுத்தப்படும் என ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டம் மற்றும் விதிகள் 1983-ன்படி கடலில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.  எனவே, திருநெல்வேலி மாவட்ட கடலோர மீனவ கிராமங்களான கூடுதாழை முதல் கூட்டப்புளி வரையுள்ள 7 மீனவ கிராமங்களில் அரசால் தடைசெய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீனவர்கள் மீன்பிடிக்கக் கூடாது. 
தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்தால் மீனவர்களின் வள்ளம், வலை மற்றும் மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.  தொடர்ந்து அத்துமீறிசெயல்படும் மீனவர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் நிறுத்தி வைக்கப்படும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT