திருநெல்வேலி

சங்கரன்கோவிலில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி

7th Sep 2019 08:37 AM

ADVERTISEMENT

சங்கரன்கோவில் ஸ்ரீவையாபுரி வித்யாலயா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற மழைநீர்  சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
சுவாமி சன்னதியில் இருந்து புறப்பட்ட இப்பேரணியை காவல் ஆய்வாளர் கண்ணன் தொடங்கி வைத்தார். பள்ளியின் முதல்வர் சி.ஏ. சுருளிநாதன் முன்னிலை வகித்தார். பேரணியில் சாரணர், சாரணியர் இயக்கம், நாட்டுநலப்பணித் திட்ட மாணவர், மாணவிகள் 400 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். மாணவர்கள் மழைநீர் சேமிப்பை வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய அட்டையை ஏந்திச் சென்றனர். பிரதான சாலை  வழியாக வந்து பயணியர் விடுதி முன்பு நிறைவடைந்தது. ஏற்பாடுகளை பள்ளிச் செயலர் மருத்துவர் வி.எஸ். சுப்பராஜ், தாளாளர் சுப்பையாசீனிவாசன், ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT