திருநெல்வேலி

சங்கரன்கோவிலில் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

7th Sep 2019 08:38 AM

ADVERTISEMENT

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ -ஜியோ அமைப்பினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சி.பி.எஸ்.- ஐ ரத்து செய்ய வேண்டும், இடைநிலை ஆசிரியர் ஊதியப் பிரச்னையை களைய வேண்டும், ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் மீது போடப்பட்ட தற்காலிக பணிநீக்க உத்தரவுகளைத் திரும்பப் பெற வேண்டும்,  தேசிய கல்விக்கொள்கை வரைவு -2019 ஐ திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு,  ஜாக்டோ- ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன்,  வட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பால்ராஜ், வேல்ராஜன், வே.ஆதிநாராயணன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் ராசையா, பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு இளங்கோகண்ணன்,  உடற்கல்வி இயக்குநர் சங்கம் நாராயணன், சாலைப் பணியாளர்கள் சங்க வட்டத் தலைவர் ராமர், மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் பசுபதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இணைச் செயலர் பிரகாஷ் நன்றி கூறினார்.


 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT