திருநெல்வேலி

குறிச்சியில் விநாயகர் விசர்ஜன ஊர்வலம்

7th Sep 2019 10:47 AM

ADVERTISEMENT

மேலப்பாளையம் அருகேயுள்ள குறிச்சியில் விநாயகர் விசர்ஜன ஊர்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
குறிச்சி சொக்கநாதர் கோயில் தெருவில் விவேகானந்த மகாசபை சார்பில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கடந்த 2 ஆம் தேதி 11 அடி உயரத்தில் மகா விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.  தொடர்ந்து வீடுகளில் பூஜைக்கு சிறிய விநாயகர் வழங்குதல், கூட்டுப்பிரார்த்தனை, அலங்கார பூஜை ஆகியவை நடைபெற்றன. மழைவளம் பெருக வேண்டி மகாவேள்வி நடைபெற்றது.  தொடர்ந்து கோ பூஜை, கோலப்போட்டிகளும் நடைபெற்றன.  விநாயகர் விசர்ஜன ஊர்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மலர் அலங்காரத்துடன் மகா விநாயகர் சிலை குறிச்சியில் உள்ள வீதிகளில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. பின்னர் கொக்கிரகுளம் தாமிரவருணி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT