திருநெல்வேலி

"குடிமைப் பொருள் விநியோகத்தில் தவறிழைத்தால் கடும் நடவடிக்கை'

7th Sep 2019 10:49 AM

ADVERTISEMENT

குடிமைப் பொருள் விநியோகத்தில் தவறிழைக்கும் நியாய விலைக்கடைப் பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பிரியதர்ஷினி எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் உத்தரவின்பேரில், மாவட்ட துணைப் பதிவாளர் தலைமையில் திருநெல்வேலி மாவட்டத்தில் 58 நியாய விலைக் கடைகளில் கூட்டுறவு அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் 19 கிலோ அரிசி, கோதுமை 2 கிலோ, சீனி 85 கிலோ, துவரம் பருப்பு 45 கிலோ, 5 பாக்கெட் பாமாயில், 47 தேயிலை பாக்கெட், 107 உப்பு பாக்கெட், 9 லிட்டர் மண்ணெண்ணெய் ஆகிய அத்தியாவசியப் பொருள்கள் இருப்புக் குறைவு ஏற்படுத்தியும், சில கடைகளில் கூடுதல் இருப்பு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
 கண்டுபிடிக்கப்பட்ட பொருள்களின் மதிப்பு ரூ.9899 ஆகும். இதையடுத்து தவறு செய்த பணியாளர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. குடிமைப் பொருள் விநியோகத்தில் தவறு செய்யும் நியாய விலைக்கடை பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT