திருநெல்வேலி

கருப்பந்துறையில் தாமிரவருணி குறுக்கே உயர்நிலை  பாலம் அமைக்கக் கோரி மனு

7th Sep 2019 10:51 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி கருப்பந்துறை பகுதியில் தாமிரவருணியின் குறுக்கே உயர்நிலை பாலம் அமைக்கக் கோரி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வழக்குரைஞர் ஆர். அலெக்ஸ் மற்றும் பொதுமக்கள் அளித்த மனு: மேலப்பாளையம்-திருநெல்வேலி நகரம் சாலையில் கருப்பந்துறை பகுதியில் தாமிரவருணியின் குறுக்கே பழமையான தரைநிலை பாலம் உள்ளது. 
வற்றாத ஜீவநதியான தாமிரவருணி ஆற்றில் அதிகமாக நீர்வரத்து வரும் காலங்களில் இந்தத் தரைப்பாலத்தை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.
 பொதுமக்கள் நலன்கருதியும், நெல்லை மாநகரப் பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடிகளைக் குறைக்கும் வகையிலும் கருப்பந்துறையில் தாமிரவருணியின் குறுக்கே உயர்நிலை பாலம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT