திருநெல்வேலி

இடைச்சிவிளை முத்தாரம்மன் கோயில் கொடை விழா

7th Sep 2019 08:35 AM

ADVERTISEMENT

திசையன்விளை அருகே உள்ள இடைச்சிவிளை ஸ்ரீ முத்தாரம்மன் கோயில் கொடை விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வியாழக்கிழமை வரை 5 நாள்கள் நடைபெற்றது.
தொடக்க நாளன்று அம்மனுக்கு அபிஷேகம், அலங்கார பூஜை,  பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இரண்டாம் நாள் அலங்கார பூஜை, அம்மன் மஞ்சள் நீராடல், அம்மன் வீதியுலா, திருவிளக்கு பூஜை, பெண்கள் கலந்துகொண்ட மஞ்சள் பெட்டி ஊர்வலம் ஆகியவை நடைபெற்றன. மூன்றாம் நாள் அம்மனுக்கு அபிஷேகம், அலங்கார பூஜை, அம்மன் வீதியுலா, மாவிளக்கு ஊர்வலம், அம்மன் சப்பரத்தில் வீதியுலா வருதல் நடைபெற்றது. 
நான்கு மற்றும் ஐந்தாம் நாள் விழாவில் விளையாட்டுப் போட்டிகள், பக்தி பரத நாட்டிய நிகழ்ச்சி, பரிசு வழங்குதல் உள்ளிட்டவை நடைபெற்றன.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT