திருநெல்வேலி

ஆலங்குளத்தில் தண்ணீர் தொட்டியில் விழுந்த குழந்தை பலி

7th Sep 2019 08:33 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளத்தில் தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்த 10 மாத குழந்தை உயிரிழந்தது.
ஆலங்குளம் அண்ணாநகர் 4 ஆவது தெருவைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி முத்துலெட்சுமி. இத்தம்பதியின் 10 மாத ஆண் குழந்தை கவின். முத்துலட்சுமி வெள்ளிக்கிழமை வீட்டிலுள்ள குடிநீர் இணைப்பில் இருந்து தண்ணீர் பிடித்து கொண்டிருந்தாராம். அப்போது, கவினும் அங்கு விளையாடிக் கொண்டிருந்தானாம். 
முத்துலெட்சுமி தண்ணீர் குடத்தை வீட்டுக்குள் வைக்க சென்றாராம். திரும்பி வந்து பார்த்தபோது கவின், தரைமட்ட குடிநீர் தொட்டியில் தத்தளித்துக் கொண்டிருந்து தெரியவந்தது. முத்துலெட்சுமி குழந்தையை தூக்கிக் கொண்டு அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஆலங்குளம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT