திருநெல்வேலி

அந்தியோதயா விரைவு ரயில் நான்குனேரியில் நின்று செல்லக் கோரிக்கை

7th Sep 2019 08:36 AM

ADVERTISEMENT

நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு  வள்ளியூர், நான்குனேரி, திருநெல்வேலி வழியாக இயக்கப்படும் அந்தியோதயா விரைவு ரயில் நான்குனேரியில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் போராட்டக் குழு கோரிக்கை விடுத்துள்ளது. 
இதுகுறித்து களக்காடு மக்கள் போராட்டக் குழு முதன்மை ஒருங்கிணைப்பாளர் ஏ.கே. நெல்சன் வெளியிட்ட அறிக்கை:  நாகர்கோவில் - சென்னை, சென்னை - நாகர்கோவில் இடையே புதிதாக அந்தியோதயா விரைவு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் அனைத்து பெட்டிகளுக்கும் முன்பதிவு கிடையாது.  குறைந்த கட்டணமே நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் இந்த ரயிலில் பயணிக்க ஏழை, எளிய,  நடுத்தர மக்கள் அதிகளவில் விரும்புகின்றனர். 
நான்குனேரி வட்டத்துக்குள்பட்ட 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நான்குனேரி ரயில் நிலையத்தையே பயன்படுத்தி வருகின்றனர்.  இந்த ரயில் நிலையத்தில் பல விரைவு ரயில்கள் நின்று செல்லும் நிலையில், அந்தியோதயா விரைவு ரயில் மட்டும்  நின்று செல்வதில்லை. இதனால் இப்பகுதி மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே, நான்குனேரியில் இந்த ரயில் நின்று செல்ல ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT