திருநெல்வேலி

வில்வித்தை போட்டி: தங்கப் பதக்கம் வென்ற அரசுப் பள்ளி மாணவருக்கு பாராட்டு

4th Sep 2019 10:16 AM

ADVERTISEMENT

தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற வில்வித்தை போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற அரசுப் பள்ளி மாணவரை தென்காசி கல்வி மாவட்ட அலுவலர் பாராட்டினார்.
தென்காசி கல்வி மாவட்டம் சீவநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர் கிரிஷ்குமார். இம்மாணவர் நாடுகளுக்கிடையேயான வில்வித்தை போட்டியில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் பெற்றார்.
வெற்றி பெற்ற மாணவரை கல்வி மாவட்ட அலுவலர் சீனிவாசன், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் ப.சட்டநாதன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அமுதா, கல்வி தொலைக்காட்சி ஒருங்கிணைப்பாளர் சார்லஸ், பள்ளித் தலைமையாசிரியர் ஜெயபிரகாஷ் (பொ) உள்ளிட்டோர் பாராட்டினர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT