திருநெல்வேலி

விபத்தில் காயமடைந்த இளைஞர் உயிரிழப்பு

4th Sep 2019 10:30 AM

ADVERTISEMENT

பாளையங்கோட்டையில் நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த இளைஞர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகேயுள்ள சன்னதுபுதுக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மாசானமுத்து (24). எலக்ட்ரீஷனாகப் பணியாற்றி வந்த இவர், தனது மோட்டார் சைக்கிளில் பாளையங்கோட்டைக்கு திங்கள்கிழமை வந்தாராம். சமாதானபுரம் பகுதியில் அவர் சென்று கொண்டிருந்தபோது, மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியதாகக் கூறப்படுகிறது. பலத்த காயமடைந்த மாசானமுத்துவை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT