திருநெல்வேலி

வஉசி பிறந்த நாள் விழா: அதிமுகவினருக்கு மாவட்டச் செயலர் அழைப்பு

4th Sep 2019 10:16 AM

ADVERTISEMENT

வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாள் விழாவில் கலந்துகொள்ளுமாறு அதிமுகவினருக்கு திருநெல்வேலி மாநகர் மாவட்டச் செயலர் தச்சை என்.கணேசராஜா அழைப்பு விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக  அவர் வெளியிட்ட அறிக்கை: சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சிதம்பரனாரின் 148 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு அவருடைய நினைவு மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு வியாழக்கிழமை (செப். 5) முற்பகல் 11 மணிக்கு மாநகர் மாவட்டம் சார்பில், அவைத் தலைவர் பரணி அ. சங்கரலிங்கம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் கட்சியினர் திரளாக கலந்துகொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT