திருநெல்வேலி

மேலப்பாளையம்: மாநகராட்சி  கிடங்கில் 2ஆவது நாளாக தீ

4th Sep 2019 10:29 AM

ADVERTISEMENT

மேலப்பாளையத்தில் மாநகராட்சி மண்டல அலுவலக வளாகத்தில் உள்ள பழைய பொருள்கள் கிடங்கில் 2ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் தீப்பிடித்ததால் தீயணைப்புப் படையினர் சென்று தீயை அணைத்தனர்.
மேலப்பாளையம் மாநகராட்சி மண்டலத்திற்குள்பட்ட வார்டுகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றும்போது பறிமுதல் செய்யப்படும் பொருள்கள் கிடங்கில் வைக்கப்பட்டிருந்தன. அதில் திங்கள்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பொருள்கள் மட்டுமன்றி மாநகராட்சிக்குச் சொந்தமான பழைய ஆவணங்கள், ரசீது புத்தகங்கள், தளவாட பொருள்களும் தீயில் எரிந்து சேதமாகின.
இந்நிலையில் 2ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை காலையிலும் லேசான தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் வீரராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சென்று தீயை அணைத்தனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT