திருநெல்வேலி

மானூர் அருகே விபத்து: இளைஞர் பலி

4th Sep 2019 10:17 AM

ADVERTISEMENT

மானூர் அருகே இரு சக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.
திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள மருதப்பபுரத்தைச் சேர்ந்த மருதபாண்டியன் மகன் வெங்கட்ராமன் (37). இவர் செவ்வாய்க்கிழமை மாலை தனது இருசக்கர வாகனத்தில் மானூரை அடுத்துள்ள செட்டிக்குறிச்சி அருகே பிரதான சாலையில் வந்துகொண்டிருந்தாராம். அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த வெங்கட்ராமன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த மானூர் போலீஸார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT