திருநெல்வேலி

பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் விண்வெளிக் கண்காட்சி: நாளை தொடக்கம்

4th Sep 2019 10:29 AM

ADVERTISEMENT

இந்திய விண்வெளி அறிவியலின் தந்தையான விக்ரம் சாராபாய் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, இந்திய விண்வெளித் துறை,  அணுசக்தி துறை சார்பில் வரும் 5, 6, 7,8  ஆகிய தேதிகளில் விண்வெளிக் கண்காட்சி திருநெல்வேலி வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் நடைபெறுகிறது.
இது தொடர்பாக மகேந்திரகிரி இஸ்ரோ உந்தும வளாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
விக்ரம் சாராபாய் நூற்றாண்டு விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக இந்திய விண்வெளித் துறை,  அணுசக்தி துறை மற்றும் பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி சார்பில் மிகப் பிரமாண்டமான விண்வெளிக் கண்காட்சி வரும் 5, 6,  7, 8 ஆகிய தேதிகளில்  காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை திருநெல்வேலி பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் நடைபெறுகிறது. 
விண்வெளியில் செலுத்தப்படும் ராக்கெட், உதிரிபாகங்கள், செயற்கைக்கோள் மாதிரிகள் மற்றும் விண்வெளி அறிவியலை விளக்கும் காட்சிப் படங்கள் இதில் இடம்பெறுகின்றன.  இந்தியாவால் விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் விண்கலம் குறித்த ஒளிச்சித்திரங்கள் திரையிடப்படும். இரவில்  மாணவர்கள் தொலைநோக்கி மூலம் விண்வெளியைப் பார்வையிடலாம்.
பிரபல விஞ்ஞானிகள், அறிஞர்கள் பங்கேற்கும் விண்வெளி, அணுசக்தி, விவசாயம், மீன்வளம் சார்ந்த சொற்பொழிவுகள் மற்றும் விவாத மேடைகள் இடம்பெறும். மாணவ, மாணவியருக்கான வேலைவாய்ப்பு வழிகாட்டுதலும் இடம்பெறும். ஐ.டி.ஐ.,  பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான மாதிரி உருவாக்கும் போட்டி வரும் 5 ஆம் தேதி காலையில் நடைபெறும். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு பயன்பெறலாம்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT