திருநெல்வேலி

"பிராணிகள் வதை தடுப்புச் சங்கத்தில் சேர விண்ணப்பிக்கலாம்'

4th Sep 2019 10:16 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டத்தில் பிராணிகள் வதை தடுப்புச் சங்கத்தில் சேருவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் பிராணிகள் வதை தடுப்புச் சங்கத்தில் தற்போது உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதில் சேர விரும்பும் ஆர்வலர்கள் தங்களுடை சுயவிவரங்கள், விலங்குகள் நல ஆர்வத்தில் தங்கள் ஈடுபாடு குறித்த விவரங்களுடன், மாவட்ட மண்டல இணை இயக்குநர், கால்நடை பராமரிப்புத் துறை, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், திருநெல்வேலி என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT