திருநெல்வேலி

பாளை. தலைமை அஞ்சலகத்தில் வாடிக்கையாளர் சந்திப்பு

4th Sep 2019 10:27 AM

ADVERTISEMENT

இந்திய அஞ்சல் துறையின் பேமென்ட்ஸ் வங்கி ஓராண்டு நிறைவு பெறுவதையொட்டி வாடிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி பாளையங்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ரா.சாந்தகுமார் தலைமை வகித்து சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். 
நிகழ்ச்சியில், பேமென்ட்ஸ் வங்கி முதுநிலை மேலாளர் எம்.டி.விஜய், விற்பனை மேலாளர் என்.மோகன் குமார், கிளை மேலாளர் ஏஞ்சல் பிரியதர்ஷினி, பிராந்திய மேலாளர் ஜெ.ஆனந்த் புஷ்பராஜ், திருநெல்வேலி கோட்ட உதவி கண்காணிப்பாளர்கள் மு.வேதராஜன், சா.மாரியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT