திருநெல்வேலி

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மாணவர்களுக்கான போட்டிகள் அறிவிப்பு

4th Sep 2019 10:21 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் ஆசிரியர் தினத்தை ஒட்டி மாணவர்களுக்கான போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக திருநெல்வேலி மாவட்டச் செயலர் சுரேஷ்குமார், நிகழ்ச்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தங்கம் ஆகியோர் வெளியிட்ட அறிக்கை: ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் ஆண்டுதோறும் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 
நிகழாண்டு, 5- 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு "தேர்வும் நானும்' என்ற தலைப்பிலும், 9- 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு "நான் விரும்பும் வகுப்பறை' என்ற தலைப்பிலும், பள்ளி ஆசிரியர்களுக்கு "என்னமோ நடக்குது- மர்மமாஇருக்குது' என்ற தலைப்பிலும், கல்வி ஆர்வலர்களுக்கு "அரசுப் பள்ளிகள் இணைப்பும், அடைப்பும்' என்ற தலைப்பிலும் கட்டுரைப் போட்டிகள் நடைபெறுகின்றன.
கல்லூரி மாணவர்களுக்கு "நின்னா தேர்வு, நடந்தா தேர்வு' என்ற தலைப்பில் கவிதைப் போட்டி நடைபெறும். கல்வி என்ற பொதுத் தலைப்பில் நடைபெறும் சிறுகதைப் பிரிவில் அனைவரும் கலந்துகொள்ளலாம். ஏ4 அளவு தாளில் 3 பக்கங்களுக்கு மிகாமல் கட்டுரை இருக்க வேண்டும். கவிதை இருபது வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். சிறுகதை 4 பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஒருவர் ஒரு பிரிவில் ஒரு படைப்பு மட்டுமே அனுப்ப வேண்டும். சொந்த படைப்பாகவும் புதியதாகவும் இருக்க வேண்டும். படைப்புகளை எழுதி அஞ்சலிலோ அல்லது தட்டச்சு செய்து மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம். பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். ஒவ்வொரு பிரிவிற்கும் மாவட்ட, மாநில அளவில் மூன்று பரிசுகள் வழங்கப்படும். பரிசு பெற்ற படைப்புகள் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் புதுவிழுது இருமாத கல்வி இதழில் வெளியிடப்படும். படைப்புகளை செப். 15-க்குள் மாநில ஒருங்கிணைப்பாளர் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
முகவரி தங்கம், தலைமையாசிரியர், ரத்னா ஆங்கிலப் பள்ளி, காவல் நிலைய தெரு, கடையநல்லூர். மின் அஞ்சல் முகவரி r​a‌t‌n​a‌s​c‌h‌o‌o‌l‌s@‌g‌m​a‌i‌l.​c‌o‌m போட்டி முடிவுகள் செப்.30 அன்று தமிழ்நாடு அறிவியல் இயக்க இணையதளமான ‌w‌w‌w.‌t‌n‌s‌f.​c‌o.‌i‌n-ல் வெளியிடப்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT