திருநெல்வேலி

தமிழிசைக்கு ஆளுநர் பதவி: பிரதமருக்கு தெட்சிணமாற நாடார் சங்கம் நன்றி

4th Sep 2019 10:28 AM

ADVERTISEMENT

தமிழிசை செளந்தரராஜனை தெலங்கானா ஆளுநராக நியமித்ததற்காக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு தெட்சிணமாற நாடார் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அச்சங்கச் செயலர் கே.சண்முகவேல் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் பாஜக தலைவராக சிறப்பாக செயல்பட்டதற்கான பரிசாக தெலங்கானா மாநில ஆளுநராக தமிழிசை செளந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். இது ஒட்டுமொத்த நாடார் சமூகத்தையும் மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
காமராஜருக்குப் பிறகு நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவருக்கு பெரிய பதவி கிடைத்துள்ளது. இப்பொறுப்பை வழங்கியதற்காக பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு நாடார் சமுதாயம் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். தமிழிசையின் பணி சிறக்கவும், தெலங்கானா வளர்ச்சிக்காக அவர் அர்ப்பணிப்புடன் பணியாற்றவும் தெட்சிணமாற நாடார் சங்கம் சார்பில் வாழ்த்துகள் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT