திருநெல்வேலி

தடகளம்: தெற்கு கள்ளிகுளம் ஓ.எல்.எஸ். பள்ளி சிறப்பிடம்

4th Sep 2019 10:15 AM

ADVERTISEMENT

வள்ளியூர் வட்டார அளவிலான குழு விளையாட்டுப் போட்டிகளில் தெற்கு கள்ளிகுளம் ஓ.எல்.எஸ்.மெட்ரிக் பள்ளி சிறப்பிடம் பெற்றது.
வள்ளியூர் வட்டார அளவிலான குழு விளையாட்டுப் போட்டிகள் வடக்கன்குளம் புனித தெரசா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இப்போட்டிகளில் தெற்கு கள்ளிகுளம் ஓ.எல்.எஸ். மெட்ரிக் பள்ளி மாணவர், மாணவிகள் பங்கேற்றனர்.
இதில், 14 வயதுக்குள்பட்டோருக்கான எறி பந்து போட்டியில் மாணவிகள் அனனியா, ஜெனிபா, ஜிஷா, ஸ்னோலின், டிஜூ, அனஸ்கா, ஜார்மின், ரிஷ்னி, டிஷ்னி, ஹரோபா, ஷாஃப்ரினா, துன்யா, ஜெமிமா, ரிதன்யா ஆகியோர் அடங்கிய குழு முதலிடம் பெற்றது. கால்பந்து போட்டியில் 2ஆவது இடம் பெற்றனர்.
14 வயதுக்குள்பட்ட மாணவிகளுக்கான வாலிபால் போட்டியில் 2ஆம் இடம் பெற்றனர். செஸ் போட்டியில் 5ஆம் வகுப்பு மாணவி அனிஷா 3ஆவது இடமும், கேரம் போட்டியில் 14 வயதுக்குள்பட்ட மாணவிகள் பிரிவில் அமலஜெனிபா, கீர்த்தி ஆகியோர் 2ஆவது இடமும், 17 வயதுக்குள்பட்ட மாணவிகள் பிரிவில் மெராக்லின் 2ஆவது இடமும் பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்,  மாணவிகளையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் சேவியர் பாப்பா, ஜான் தினகரன் ஆகியோரையும், பள்ளித் தாளாளரும் முதல்வருமான வின்சென்ட், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பாராட்டினர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT