திருநெல்வேலி

சேரன்மகாதேவியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: ஆட்டோ ஓட்டுநருக்கு ஆயுள்

4th Sep 2019 10:19 AM

ADVERTISEMENT

சேரன்மகாதேவியில் சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ததாக ஆட்டோ ஓட்டுநருக்கு ஆயுள்தண்டனை விதித்து திருநெல்வேலி மகளிர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு அளித்தது.
சேரன்மகாதேவியைச் சேர்ந்தவர் ஞானதுரை (58). ஆட்டோ ஓட்டுநர். இவர் கடந்த 2013ஆம் ஆண்டு ஜன. 27ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்தாராம். இதுகுறித்த புகாரின்பேரில் சேரன்மகாதேவி போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.  இதுதொடர்பான வழக்கு திருநெல்வேலி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை நீதிபதி இந்திராணி விசாரித்தார். வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஞானதுரைக்கு, ஆயுள் தண்டனையும், ரூ.1.20 லட்சம் அபராதமும் விதித்து செவ்வாய்க்கிழமை தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்த வழக்கில், அரசு வழக்குரைஞராக பால்கனி ஆஜரானார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT