திருநெல்வேலி

சுரண்டை அருகே கோயிலில் வரி வாங்க மறுப்பு: ஆட்சியரிடம் புகார்

4th Sep 2019 10:15 AM

ADVERTISEMENT

சுரண்டை அருகேயுள்ள இடையார்தவனை, கன்னியம்மன் கோயில் பகுதியில் உள்ள நாராயண சுவாமி கோயிலில் ஒரு தரப்பினர் வரி வாங்க மறுப்பதாகக் கூறி, மற்றொரு தரப்பினர் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் அளித்த மனு: எங்கள் ஊரில் உள்ள நாராயண சுவாமி கோயிலின் மூத்த நிர்வாகிகள், எங்கள் தரப்பைச் சேர்ந்த 70 பேரிடம் வரி வாங்க மறுக்கின்றனர். நாங்கள் பல தலைமுறைகளாக இந்த கோயிலுக்கு வரி கொடுத்து வருகிறோம். இந்நிலையில் திடீரென வரி வாங்க மறுப்பதோடு, கோயிலில் எங்கள் பெயரில் உள்ள கல்வெட்டுகளையும் உடைத்து அத்துமீறி செயல்படுகின்றனர். 
இதுதொடர்பாக சுரண்டை காவல் நிலையம், காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் ஆகியவற்றில் மனு அளித்துள்ளோம். எனவே, எதிர் தரப்பினரை அழைத்து விசாரித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT