திருநெல்வேலி

சிவகிரி அருகே  டிராக்டர் - பைக் மோதல்: இளைஞர் பலி

4th Sep 2019 10:14 AM

ADVERTISEMENT

சிவகிரி அருகே டிராக்டரும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டதில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விருதுநகர் மாவட்டம், சேத்தூர் பாரதி நகரைச் சேர்ந்த மாடசாமி மகன் கௌதம் (20). பாலிடெக்னிக் முடித்துள்ளார். இவர், திங்கள்கிழமை தேவிபட்டணத்தில் நடைபெற்ற நண்பரின் திருமணத்தில் பங்கேற்பதற்காக சிவகிரியில் பரிசுப் பொருள் வாங்கிவிட்டு, நண்பர்களான சங்கரன்கோவில் அருகேயுள்ள புளியம்பட்டியைச் சேர்ந்த கருமன் மகன் முத்துராஜ்(19), தேவிபட்டணம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சீனிராஜ் மகன் மாரிமுத்து (20) ஆகியோருடன் தேவிபட்டணத்துக்கு ஒரே மோட்டார்சைக்கிளில் சென்றாராம். மோட்டார் சைக்கிளை கௌதம் ஓட்டிச் சென்றுள்ளார்.
சிவகிரி - தேவிபட்டணம் சாலையில் ஒரு தோப்பு அருகே மோட்டார்சைக்கிளும், சிவகிரிக்குச் சென்றுகொண்டிருந்த டிராக்டரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதாம். இதில், கௌதம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த முத்துராஜ் மேல்சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மாரிமுத்து சிறு காயத்துடன் உயிர் தப்பினார்.
இச்சம்பவம் குறித்து சிவகிரி போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT