திருநெல்வேலி

சிவகிரியில் வழக்குரைஞர்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு

4th Sep 2019 10:18 AM

ADVERTISEMENT

சிவகிரியில் வழக்குரைஞர்கள் செவ்வாய்க்கிழமை நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
சிவகிரி அட்வகேட்ஸ் அசோசியேசன் அவசரக் கூட்டம் அதன் தலைவர் ஆர். சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. செயலர் பி. ஜவாஹர்லால் நேரு முன்னிலை வகித்தார். 
தொடர்ந்து, மோட்டார் வாகன விபத்துகள் இழப்பீடு கோரும் வழக்குகளில், நீதிமன்றம் உத்தரவுகளை பிறப்பித்தவுடன் நிவாரணத் தொகையைக் காப்பீட்டு நிறுவனங்கள்  வங்கியில் வைப்பீடு செய்து, அதை சம்பந்தப்பட்டவர்கள் தவணை முறையில் பெற்றுக்கொள்ளும் வகையில் சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையைத் திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞர்கள் கூட்டமைப்பு (ஜாக்) கோரிக்கையை ஏற்று, வழக்குரைஞர்கள் செவ்வாய்க்கிழமை (செப். 3) நீதிமன்றப் பணிகளை புறக்கணித்தனர். 
இதில், பொருளாளர் வி. தெய்வக்குமார், வழக்குரைஞர்கள் எம்.பி.கே. மருதப்பன், ராதாகிருஷ்ணன், பிச்சையா, ராமராஜ், முருகேசன், பழனி, கார்த்திகா பழனி, வன்னியராஜா, சண்முகசிகாமணி, செந்தில் திருமலைக்குமார், திருமாறன், முருகையாபாண்டியன், செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT