திருநெல்வேலி

சங்கிலி பூதத்தார் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்

4th Sep 2019 10:25 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி நகரம் ஸ்ரீசங்கிலி பூதத்தார் சமேத பேச்சியம்மன் கோயில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா புதன்கிழமை (செப். 4) நடைபெறுகிறது.
இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு மங்கள இசை, திருமுறை பாராயணம், இரண்டாம் கால யாக பூஜை, விக்னேஷ்வர பூஜை, புண்யாக வாசனம், பஞ்சகவ்ய பூஜை, பிம்பசுத்தி, மூர்த்திகளுக்கு ரக்ஷா பந்தனம், வேதிகார்ச்சனை மூல மந்திர ஜபம், ஹோமம், த்ரவ்யாஹுதி, மகா பூர்ணாகுதி, தீபாராதனை, யாத்ராதானம் உள்ளிட்டவை நடைபெறுகின்றன. காலை 6.30 மணிக்கு கடம் புறப்பாடு, விமான அபிஷேகம், மூலாலய மூர்த்திக்கு புதன் ஹோரையுடன் கூடிய சிம்ம லக்கனத்தில் ஸ்ரீசங்கிலி பூதத்தார் சமேத பேச்சியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது. 
காலை 9.30 மணிக்கு மகா அபிஷேகம், விசேஷ அலங்காரம், தீபாராதனை, மகேஸ்வர பூஜை, அன்னதானம் ஆகியவை நடைபெறும். மாலை 6 மணிக்கு விசேஷ அலங்காரத்துடன் லலிதா ஸகஸ்ர நாம அர்ச்சனை, சோடஷ உபசார தீபாராதனை ஆகியவை நடைபெறுகின்றன.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT