திருநெல்வேலி

சங்கரன்கோவிலில் வாகனம் மோதி மின் கம்பம் சேதம்

4th Sep 2019 10:17 AM

ADVERTISEMENT

சங்கரன்கோவில் பிரதான சாலையில் நகைக்கடை பஜாரில் உள்ள மின்கம்பம் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முறிந்து சேதமடைந்தது.
மின்கம்பம் சேதமடைந்ததையடுத்து அப்பகுதியில் உள்ள மின் இணைப்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டன. வெளியூர்களிலிருந்து நகருக்குள் வரும் பேருந்துகள், கனரக வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் வந்து செல்லும் பிரதான சாலையில் மின் கம்பம் பழுதானதால்,  வாகனங்கள் அனைத்தும் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டன.  இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனர். சுமார் 10 மணி நேரத்துக்கு பின்பு பிற்பகல் 3 மணிக்கு புதிய மின்கம்பம்  நடப்பட்டு மின் இணைப்புகள் அளிக்கப்பட்டன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT