திருநெல்வேலி

சங்கரன்கோவிலில் பொதுமக்கள் சாலை மறியல்

4th Sep 2019 10:17 AM

ADVERTISEMENT

சங்கரன்கோவிலில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சங்கரன்கோவில் புதுமனை 5 மற்றும் 6 ஆவது தெரு பகுதிகளில் கடந்த 10 நாள்களுக்கு பிறகு செவ்வாய்க்கிழமை குடிநீர் விநியோகிக்கப்பட்டதாம். ஆனால் விநியோகிக்கப்பட்ட சில நிமிடங்களில் குடிநீர் வழங்குவது நிறுத்தப்பட்டதாம். இதைக் கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த போலீஸார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 
தொடர்ந்து முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதைத் தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT