திருநெல்வேலி

சங்கரன்கோவிலில் நீர்மேலாண்மை குறித்த விழிப்புணர்வுக் கூட்டம், கண்காட்சி

4th Sep 2019 10:18 AM

ADVERTISEMENT

சங்கரன்கோவிலில் ஜல்சக்தி அபியான் திட்டத்தின் கீழ் நீர்மேலாண்மை குறித்த விழிப்புணர்வு கூட்டம் மற்றும் வேளாண் பொருள்கள் கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமை வகித்தார்.  ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி, விவசாயிகளுக்கு நீர்மேலாண்மை தொழில்நுட்பம் குறித்த கையேடுகளை வழங்கினார். பின்னர் விவசாயிகளுக்கு பனை விதைகள், மரக்கன்றுகள் மற்றும் விவசாயத்தில் சாதனை படைத்தவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் அவர் வழங்கினார்.
தொடர்ந்து, மலைப்பகுதியில் இருந்து வரும் தண்ணீரை தடுப்பணை மற்றும் கசிவு நீர் குட்டைகள் மூலம் நீர்மேலாண்மை செய்வது, இயற்கை விவசாயம், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட செரீப் பழம் போன்றவை இடம் பெற்றிருந்த வேளாண் கண்காட்சியை அவர் பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் கே.கண்ணன், ஆறுமுகம், வேலுச்சாமி, அம்பை நெல் ஆராய்ச்சி நிலைய தலைவர் ஆறுமுகச்சாமி, பேராசிரியர் நயினார், மாவட்ட வளர்ச்சி மேலாளர் எப்.சாலிமா, வேளாண்மை தொழில்நுட்ப வல்லுநர் சுகுமார், உதவிப் பேராசிரியர் திருமலைக்குமார் ஆகியோர் வேளாண் தொழில்நுட்பம் குறித்து பேசினர். 
வேளாண் அறிவியல் மையம் மு.இளவரசன் வரவேற்றார். தொழில்நுட்ப வல்லுநர் திருமலைச்செல்வி நன்றி கூறினார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT