திருநெல்வேலி

கொக்கிரகுளத்தில் பாலவிநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

4th Sep 2019 10:29 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் உள்ள அருள்மிகு பாலவிநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கொக்கிரகுளத்தில் சுலோச்சனா முதலியார் பாலம் அருகில் அருள்மிகு பாலவிநாயகர் கோயில் உள்ளது. இப்பகுதியில் புதிய பாலம் அமைக்கப்படுவதையொட்டி இக்கோயில் அருகிலேயே இடமாற்றம் செய்யப்பட்டு, புதிதாக கட்டிமுடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கும்பாபிஷேக விழா கடந்த 1ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து யாகசாலை பூஜைகள், பூர்ணாஹுதி, அஷ்டபந்தன மருந்து சாத்துதல் ஆகியவை நடைபெற்றன. திங்கள்கிழமை காலையில் கோயில் விமானம், மூலஸ்தான விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மண்டல பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT