திருநெல்வேலி

கலை-விளையாட்டுகள்: பொடியனூர் சிவசக்தி வித்யாலயா பள்ளி வெற்றி

4th Sep 2019 10:17 AM

ADVERTISEMENT

சுரண்டையில் நடைபெற்ற கலை மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் பொடியனூர் சிவசக்தி வித்யாலயா பள்ளி மாணவர்கள் அதிக புள்ளிகள் பெற்று வெற்றி கோப்பையை வென்றனர்.
சுரண்டை எஸ்.ஆர். பள்ளியில் நடைபெற்ற இப்போட்டிகளில், சூப்பர் நேட்டோவில் ஆர்.இஸான்பிரயாக்,  டி.தனஸ்ரீ ஆகியோர் இரண்டாம் இடத்தையும், பேச்சுப் போட்டியில் எம்.ரக்சிதா, கார்டூன், தனி நடனத்தில் எம்.சரணி, கணிதப் புதிரில் எஸ்.ரோஹித் ஆகியோர் 3 ஆவது இடமும், இலை கைவினையில் எம்.பாஹஸ்த்தேவ், எஸ்.லக்சயா ராஜஸ்ரீ, நூல் கைவினையில் எஸ்.ப்ரித்தி ஆகியோர் முதலிடமும், நகைச்சுவை நாடகத்தில் பவன்லால், பிரஜித் குழுவினர் 3ஆவது இடமும், ஆங்கில பெயர் உரிச்சொல் கண்டுபிடித்தலில் எஸ்.ஸ்ரீநிவிதா முதலிடமும், பானை மூடியில் படம் வரைதலில் எம்.பொன்விஸ்வா இரண்டாவது இடமும் பெற்றனர்.
மேலும், விளையாட்டுப் போட்டியில் ஜூனியர் பிரிவில் குண்டெறிதலில் ஜெ.லலித்சேதராஜ் முதலிடத்தையும், பெண்கள் நீளம் தாண்டுதலில் எஸ்.பொன்பரலணி 2ஆவது இடமும், ஆண்களுக்கான நீளம் தாண்டுதலில் அ.விபின் ராஜா 3ஆவது இடமும் பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர், மாணவிகளை தாளாளர் மற்றும் முதல்வர் நித்யா தினகரன் உள்ளிட்டோர் பாராட்டினர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT