திருநெல்வேலி

கடையநல்லூரில் வர்த்தக நிறுவனங்கள்,  நிழற்கூரை அமைக்க மக்கள் எதிர்ப்பு

4th Sep 2019 10:14 AM

ADVERTISEMENT

கடையநல்லூரில் பேருந்து நிழற்கூரை மற்றும் வர்த்தக நிறுவனங்கள் கட்டுவதற்கு அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டன. 
மேலக்கடையநல்லூர் நகராட்சி பூங்கா பகுதியில், நகராட்சி மூலம் பேருந்து நிழற்கூரை மற்றும் வணிக நிறுவனங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இங்கு கடைகள் கட்டக் கூடாது என வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் திரண்டு வந்து வலியுறுத்தியதையடுத்து நகராட்சி அதிகாரிகள் கட்டுமானப் பணிகளை நிறுத்தினர்.
இதுதொடர்பாக நகராட்சி ஆணையர் பவுன்ராஜ் கூறியது: நகராட்சியில் குடிநீர் கட்டண உயர்வு குறித்து பரிசீலிக்க வேண்டுமென பொதுமக்களும், பல்வேறு கட்சிகளும் கோரிக்கை விடுத்து வருகின்றன. இதனால் குடிநீர்க் கட்டணத்தை குறைந்த அளவில் மட்டுமே உயர்த்துவதற்காகவும், அதை ஈடுகட்டுவதற்காகவும், நகராட்சிக்கான வருவாயைப் பெருக்கும் நோக்கத்தில் மேலக்கடையநல்லூரில் வர்த்தக கடைகள் நகராட்சி மூலம் கட்டப்பட்டு வருகின்றன.
இப்பணிக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், புதன்கிழமை அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்யப்படும் என்றார் அவர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT