திருநெல்வேலி

கடையத்தில் 15 அடி நீள மலைப்பாம்பு மீட்பு

4th Sep 2019 10:18 AM

ADVERTISEMENT

கடையத்தில் 15 அடி நீள மலைப் பாம்பை பொதுமக்கள் துணையோடு வனத்துறையினர் பிடித்து வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.
கடையம் -  ரவணசமுத்திரம் சாலையில் திங்கள்கிழமை இரவு மலைப்பாம்பு சென்றதாம். தகவல் அறிந்து வந்த கடையம் வனக்காப்பாளர் மணி தலைமையிலான வேட்டைத் தடுப்புக் காவலர்கள் வேல்சாமி, முத்துகுமார் ஆகியோர் பொதுமக்கள்  உதவியுடன் புதரில் மறைந்திருந்த சுமார் 15  அடி நீளமுள்ள  மலைப்பாம்பை பிடித்து கடனாநதி வனப்பகுதியில் கொண்டு விட்டனர். மேலும் ஆழ்வார்குறிச்சி அருகேயுள்ள வாகைக்குளத்தில் நல்லபாம்பு பிடிக்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT