திருநெல்வேலி

எல்.ஐ.சி. உரிமம் வழங்குவதில் நெல்லை கோட்டம் 2-ஆவது இடம்

4th Sep 2019 10:30 AM

ADVERTISEMENT

உரிமம், முதிர்வு உரிமம் வழங்குவதில் எல்.ஐ.சி.யின் திருநெல்வேலி கோட்டம் அகில இந்திய அளவில் 2-ஆவது இடத்தில் உள்ளது என எல்.ஐ.சி. கோட்ட முதுநிலை மேலாளர் வசந்தகுமார் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: எல்.ஐ.சி. இன்சூரன்ஸ் வார விழா செப்டம்பர் 1 முதல் 7 வரை கொண்டாடப்படுகிறது. எல்.ஐ.சி.யில் 32 தனிநபர் காப்பீடு திட்டங்கள் நடப்பில் உள்ளன. பிறந்த குழந்தை முதல் 85 வயது வரையுள்ளவர்களுக்கு திட்டங்கள் உள்ளன.
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய திருநெல்வேலி கோட்டத்தில் உள்ள 16 எல்.ஐ.சி. கிளைகள், 13 துணை அலுவலகங்கள், நேரடி வணிக மையம், வாடிக்கையாளர் சேவை மையம், ஓய்வூதியம் மற்றும் குழு காப்பீட்டுத் திட்ட கிளை அலுவலகங்கள் மற்றும் கோட்ட அலுவலகங்களிலும் இன்சூரன்ஸ் வார விழா கொண்டாடப்படுகிறது.
கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் 31 வரை 38,151 பாலிசிகள் மூலம் ரூ.124.77 கோடி வணிகம் செய்துள்ளோம். திருநெல்வேலி கோட்டத்தில் 15 லட்சம் பாலிசிதாரர்கள் உள்ளனர். எல்.ஐ.சி.யின் 64 வகையான சேவைகளுக்கு வாடிக்கையாளர்களுக்கு குறுந்தகவல் அனுப்பப்படுகிறது. செல்லிடப்பேசி எண்ணை பதிவு செய்யாத வாடிக்கையாளர்கள் பதிவு செய்யவேண்டும். செல்லிடப்பேசி எண்களை பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு எல்.ஐ.சி. யின் சேவைகள் குறித்த விவரங்கள் குறுந்தகவல் மூலம் அனுப்பப்படும்.
அகில இந்திய அளவில் இன்சூரன்ஸ் துறையில் எல்.ஐ.சி. பிரீமியத்தில் 73சதவீதமும், பாலிசியில் 72சதவீதமும் பெற்று முதலிடத்தில் உள்ளது. ஆன்லைன் வர்த்தகத்தில் கார்டு மூலம் பாலிசிக்கு பிரீமியம் கட்டும் முறை மும்பையில் பரீட்சார்த்த முறையில் செயல்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து இடங்களிலும் அந்த சேவை அமல்படுத்தப்படும்.
நடப்பு நிதியாண்டில் திருநெல்வேலி கோட்டத்தில் புது வணிக இலக்காக 1 லட்சத்து 35,500 பாலிசிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உரிமம், முதிர்வு உரிமம் வழங்குவதில் அகில இந்திய அளவில் திருநெல்வேலி கோட்டம் 2-ஆவது இடத்தில் உள்ளது என்றார்.
பேட்டியின் போது வணிக மேலாளர் வெங்கடகிருஷ்ணன், விற்பனை மேலாளர் சிவக்குமார் உடனிருந்தனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT