திருநெல்வேலி

இஸ்லாமிய அமைப்புகளுடன் ஆலோசனைக் கூட்டம்

4th Sep 2019 10:14 AM

ADVERTISEMENT

கடையநல்லூரில் புதன்கிழமை நடைபெறவுள்ள விநாயகர் சிலை ஊர்வலத்தையொட்டி, இஸ்லாமிய அமைப்புகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
காவல் உதவி ஆய்வாளர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், உதவி ஆய்வாளர் அமிர்தராஜ், தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் வேல்முருகன், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் அப்துல்காதர், அன்சாரி,  எஸ்டிபிஐ யாசர்கான், பாப்புலர் பிரண்ட்  ஆப் இந்தியா லுக்மான் ஹக்கீம்சேட் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஓரிடத்தில் ஊர்வலத்தை பார்வையிடும் இஸ்லாமிய மக்கள் மற்ற இடங்களுக்கு சென்று வேடிக்கை பார்ப்பதை தவிர்க்க வேண்டும். ஊர்வலத்திற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
28 விநாயகர் சிலைகள்: கடையநல்லூர் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள 28 சிலைகள் கடையநல்லூர் மாவடிக்கால் பகுதியில் இருந்து 11 மணிக்கு ஊர்வலமாக கிளம்பி முக்கிய வீதிகள் வழியாக சென்று மேலக்கடையநல்லூர் அண்ணாமலைநாதர் பொய்கையில் விசர்ஜனம் செய்யப்படுகிறது. ஏற்பாடுகளை இந்து முன்னணி, பாஜக மற்றும் விநாயகர் சதுர்த்தி விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT