வியாழக்கிழமை 19 செப்டம்பர் 2019

அம்பை தாமிரவருணி ஆற்றுப்பாலத்தடி இசக்கியம்மன் கோயில் கொடை விழா

DIN | Published: 04th September 2019 10:19 AM

அம்பாசமுத்திரம் தாமிரவருணி ஆற்றுப் பாலம் அருகே அமைந்துள்ள சேனைத் தலைவர் சமுதாயத்திற்குப் பாத்தியப்பட்ட பாலத்தடி இசக்கியம்மன் கோயில் கொடை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் கொடைவிழாவை முன்னிட்டு ஆக. 27ஆம் தேதி கால்நாட்டு நடைபெற்றது. தொடர்ந்து செப். 1ஆம் தேதி இரவு அம்மனுக்கு மாகாப்பு அலங்காரம், செப். 2ஆம் தேதி இரவு புஷ்ப அலங்கார பூஜை நடைபெற்றது. செப். 3ஆம் தேதி காலையில்  புதுக்கிராமம் தெரு வரசித்தி விநாயகர் கோயிலிலிருந்து பால்குட ஊர்வலம் தொடங்கி, இசக்கியம்மன் கோயிலுக்கு வந்து சேர்ந்தது. 

தொடர்ந்து கணபதி பூஜை, நவக்கிரகபூஜை, லட்சுமி ஹோமத்தைத் தொடர்ந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து கும்பாபிஷேகம், அம்மனுக்கு வெள்ளி அலங்கார, அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் ராகு கால விளக்கு பூஜை,  சிறப்பு மாவிளக்கு பூஜை,  இரவு சந்தன முழுக் காப்பு, சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. நள்ளிரவு 12 மணிக்கு படைப்பு பூஜை  நடைபெற்றது. ஏற்பாடுகளை சேனைத் தலைவர் சமுதாய நிர்வாகிகள் மற்றும் இளைஞரணி நிர்வாகிகள் செய்திருந்தனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

புளியங்குடியில் 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
சிவகிரி அருகே ரூ. 1.50 லட்சம் கேபிள் டிவி வயர் சேதம்: 4 பேர் கைது
பத்ரிநாத் யாத்திரையின் போது இறந்த ஓட்டுநர் சடலம் களக்காடு வந்தது
களக்காட்டில் இன்று மின்தடை
கிணற்றில் இருந்த மலைப்பாம்பு மீட்பு