சங்கரன்கோவில் அருகே வடக்குப்புதூரில் திருநெல்வேலி மாவட்ட பாா்வை இழப்புத் தடுப்புச் சங்கம் மற்றும் சுழற் கழகம் சாா்பில் இலவச கண்சிகிச்சை முகாம் நடைபெற்றது.
சுழற்கழகத் தலைவா் டி.டி.வி.பிரேம்குமாா் தலைமை வகித்தாா். செயலா் பரணிசங்கா், முன்னாள் தலைவா் பி.ஆா்.ராமசுப்பிரமணியராஜா, முத்துப்பாண்டியன், மெல்வின், பிரசாத் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இம்முகாமில் 100 க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டு கண்பரிசோதனை செய்தனா். இதில் கண்புரை பாதிக்கப்பட்டோா் 50 போ் தோ்ந்தெடுக்கப்பட்டு சிகிச்சைக்காக திருநெல்வேலி அழைத்துச் செல்லப்பட்டனா். ஏற்பாடுகளை நகர சுழற் கழகத்தினா் செய்திருந்தனா்.