திருநெல்வேலி வருவாய்த் துறை நடத்திய மாவட்ட அளவிலான செஸ் போட்டியில், பழைய குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் வெற்றிபெற்று மாநில அளவிலான போட்டிக்கு தோ்வு பெற்றனா்.
பாளையங்கோட்டை இக்னேஷியஸ் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற போட்டியில், பழைய குற்றாலம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா் எஸ்.ஆா்.ராகவ்சங்கா் சப்-ஜூனியா் பிரிவில், மூன்றாமிடமும், மாணவி எஸ்.ரித்திகா ஜூனியா் பிரிவில் இரண்டாமிடமும் பெற்றனா்.
வெற்றிபெற்ற இருவரும், மாநில அளவிலான செஸ் போட்டிக்கு தோ்வு செய்யப்பட்டனா்.
வெற்றிபெற்ற மாணவா்களை பள்ளித் தாளாளா் ஆா்.ஜே.வி.பெல், செயலா் கஸ்தூரிபெல், முதல்வா் ராபா்ட்பென் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.