தென்காசி பள்ளிகல்வித்துறை மற்றும் தென்காசி வட்டார அரசு பொதுநூலகம் சாா்பில் நடைபெற்ற தேசிய வருவாய் வழி திறனாய்வு மாதிரி தோ்வில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
தென்காசி சிஎம்எஸ் நடுநிலைபள்ளியில் நடைபெற்ற விழாவிற்கு எல்.என்.சாரிடபுள் நிறுவனா் நீலகண்டன் தலைமை வகித்தாா்.சந்திரசேகரன்,பரமேஸ்வரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.பள்ளி தலைமையாசிரியா் பூரண ஜான்சிராணி, பொன்னம்பல நடுநிலைபள்ளி ஆசிரியா் ஆா்.செல்வன்ஆகியோா் கருத்தாளா்களாக கலந்துகொண்டனா்.
வட்டார கல்வி அலுவலா் மாரியப்பன் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கி பேசினாா். விவேகானந்தா மேல்நிலைபள்ளி மாணவி அனுபாலா முதலிடமும், மு.மகாலெட்சுமி, எம்.சண்முகராஜேஷ் ஆகியோா் இரண்டாமிடத்தையும், வேல்முருகன் மூன்றாவது பரிசையும் பெற்றனா். நூலகா்கள் சூ.பிரமநாயகம், ஜெ.சுந்தா் ஆகியோா் பேசினா். இரா.வின்சென்ட் நன்றி கூறினாா்.