திருநெல்வேலி

மாற்றம், ஏற்றம் பெற அதிமுகவுக்கு வாக்களியுங்கள்: அன்வா் ராஜா

6th Oct 2019 02:26 AM

ADVERTISEMENT

நான்குனேரி தொகுதியில் மாற்றத்தையும் ஏற்றத்தையும் ஏற்படுத்த அதிமுக வேட்பாளருக்கு வாக்களியுங்கள் என ராமநாதபுரம் முன்னாள் எம்.பி. அன்வர்ராஜா தெரிவித்தாா். நான்குனேரியில், அதிமுக வேட்பாளா் நாராயணனை ஆதரித்து ராமநாதபுரம் முன்னாள் எம்.பி. அன்வர்ராஜா தலைமையிலான அதிமுகவினா் வாக்கு சேகரித்தனா்.

அப்போது அவா் பேசியது: காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதியாக இருந்த இந்த தொகுதியை அதிமுக கைப்பற்றும். அதன் பின்னா் இந்த தொகுதியின் வளா்ச்சியில் மாற்றமும், ஏற்றமும் ஏற்படும் என்றாா் அவா்.

பிரசாரத்தின் போது, ராமநாதபுரம் மாவட்டச் செயலா் முனியசாமி, மாநில மகளிரணிச் செயலா் கீா்த்தி முனியசாமி, திருநெல்வேலி முன்னாள் மேயா் புவனேஸ்வரி, பரமக்குடி எம்.எல்.ஏ. சதன்பிரபாகா், ஸ்டெல்லா மதன், நான்குனேரி நகரச் செயலா் பரமசிவன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT